Tuesday, 3 October 2017

25/1

A11.காஞ்சியில் அழிக்கப்பட்ட (மறைக்கப்பட்ட) பௌத்த அடையாளங்கள்.
2.
A21.PANNER SELVAM
A31.HONOR KILLING
A4-
A5 -




காஞ்சியில் அழிக்கப்பட்ட (மறைக்கப்பட்ட) பௌத்த அடையாளங்கள்.
மு.நீலகண்டன் எழுதி "உங்கள் நூலகம்", ஆக 2013 இதழில் வெளிவந்த முக்கிய கட்டுரை.
காஞ்சி “ஆயிரம் கோயில்களின் மாநகரம்” என்று பெயர் பெற்றது. காஞ்சிபுரம் இந்தியாவின் தொன்மையான வரலாற்றுச் சிறப்பு மிக்க நகர்களில் ஒன்றாகும். “நகர்களில் சிறந்தது காஞ்சி” எனக் காளிதாசரும், “கல்வியில் கரையிலாத காஞ்சி” எனத் திருநாவுக்கரசரும் காஞ்சியைப் புகழ்ந்துள்ளனர். பாலாறு, வேகவதி மற்றும் செய்யாறு ஆகிய மூன்று ஆறுகளும் இங்கு ஓடுகின்றன. வடமொழிப் புராணங்களின் கூற்றுப்படி காஞ்சி மாநகரம், இந்தியாவில் உள்ள புண்ணியப் பதிகள் ஏழனுள் ஒன்றாகும். புத்தர் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் காஞ்சிக்கு வந்து பௌத்த சமயக் கொள்கையைப் பரவச் செய்தார் என சீன பௌத்தப் பயணி யுவான்சுவாங் குறிப்பிட்டுள்ளார். தமிழ் இலக்கியத்தில் இப்பகுதி “தொண்ட மண்டலம்” என்று குறிப்பிடப்படுகிறது.
சங்க இலக்கியங்களான மணிமேகலை, பெரும் பாணாற்றுப்படை, ஆகியவற்றில் காஞ்சி நகர் குறிப் பிடப்பட்டுள்ளது. இந்நகரம் சிவக்காஞ்சி, விஷ்ணுக் காட்சி, ஜீனக் காஞ்சி, பௌத்தக் காஞ்சி என்ற நான்கு பிரிவுகளாக இருந்தது. இன்று சிவக்காஞ்சி பெரிய காஞ்சிபுரம் ஆகும். விஷ்ணுக் காஞ்சி சின்னக் காஞ்சிபுரம் ஆகும். திருப்பருத்திக்குன்றம் என்ற சிற்றூர் சமணம் வளர்த்த ஜீனக் காஞ்சியாகும். காமாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியே பௌத்தக் காஞ்சி யாகும். காஞ்சி பௌத்த, சமண, சைவ சமயங்களின் முக்கடல் நகரமாக இருந்துள்ளது. காஞ்சி, பௌத்த சமயத்தின் நிலைக்களமாக இருந்தது. தொன்மைக் காலத்தில் காஞ்சியில் பௌத்தர்கள் அதிகமாக இருந்தனர். ஆனால் தற்போது காஞ்சியில் பௌத்த அடையாளங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டது அல்லது மறைக்கப்பட்டுவிட்டது எனலாம். பௌத்தம் தொடர்பான குறியீடுகள், அகழாய்வுக் கண்டுபிடிப்புகள், தமிழ் இலக்கியங்கள், பௌத்த ஆய்வு நூல்களில் திரட்டப் பட்ட தரவுகள் களப்பணியில் பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் “காஞ்சியில் அழிக்கப் பட்ட (மறைக்கப்பட்ட) பௌத்த அடையாளங்கள்” என்ற தலைப்பில் சிறு ஆய்வு ஒன்று இங்குப் பதிவு செய்யப்படுகிறது.
அசோகரின் பௌத்த ஸ்தூபி:-
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் (கி.பி.640) காஞ்சிக்கு வந்த சீன பௌத்தப் பயணி யுவான்சுவாங், தனது பயணக் குறிப்பில் காஞ்சியில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அசோகப் பேரரசரால் கட்டப்பட்ட ஸ்தூபிகள் பழுது பட்டுக் கிடந்தன என்றும் இந்நகரில் நூற்றுக்கும் மேற் பட்ட புத்த மடங்கள் இருந்தன, இவற்றில் ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்த துறவிகள் வாழ்ந்தனர், இவையன்றி எண்பதுக்கு மேற்பட்ட இந்து சமணர் கோயில்களும் இருந்தன என்கிறார்.
தற்போது, காஞ்சியில் நூற்றுக்கு மேற்பட்ட இந்துக் கோயில்கள் உள்ளன. இதில் இந்து ஓதுவார்களும், குருக்களும் பணியாற்றுகிறார்கள். ஆனால் பௌத்த மடங்களோ தூபிகளோ, பௌத்த துறவிகளோ காண முடியவில்லை. அனைத்து பௌத்த அடையாளங்களும் இந்துக்களால் அழிக்கப்பட்டுள்ளன.
காஞ்சியில் புத்தர் கோயில்
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட கிள்ளிவளவன் என்னும் சோழனின் தம்பி இளங்கிள்ளி என்பவன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்ட காலத்தில் “புத்தருக்குக் கோயில்” ஒன்றைக் கட்டினான் என்று மணிமேகலையினால் அறிகிறோம்.
“பைம் பூம் போதிப் பகவற்கு இயற்றிய
சேதியந்தொழுது தென் மேற்காகத்”
மணிமேகலை-28:174-175
மேலும், காஞ்சியில் “தருமத வனம்” என்னும் தோட்டத்தில் இளங்கிள்ளி ஒரு புத்த பீடிகையை அமைத்து விழாவும் சிறப்பும் செய்தானென்றும் மணிமேகலை கூறுகிறது. ஆனால் இன்று காஞ்சியில் புத்தர் கோயிலும், புத்த பீடிகையும் காண முடியவில்லை. அத்தனையும் அழிக்கப்பட்டுள்ளது.
காஞ்சியில் இராஜ விகாரம்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
காஞ்சியை அரசாண்ட பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் (கி.பி. 590-629) தான் எழுதிய மத்த விலாசப் பிரகசனம் என்னும் நூலில், காஞ்சியில் பல பௌத்த விகாரங்கள் இருந்தன என்றும் அவ்விகாரங்களுக் கெல்லாம் தலைமையாக இருந்த பெரிய விகாருக்கு “இராஜ விகார்” என்று பெயர் இருந்ததென்றும் கூறுகிறார். இந்த விகாரம் கட்டுவதற்குச் சில மன்னர்கள் உதவி புரிந்து இருப்பர் என்று கருதப்படுகிறது. இருப்பினும், ஆரம்ப காலப் பல்லவ மன்னர்களால் இந்த விகாரம் கட்டியிருக்கக் கூடும் என்று யூகிக்கப்படுகிறது. யுவான்சுவாங் தனது பயணக் குறிப்பில் இந்த விகாரத்தைப்பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த இராஜ விகார் பின்னாளில் அழிக்கப் பட்டுவிட்டது. அதன் அடையாளங்கள் காஞ்சியில் தென்படவில்லை.
காஞ்சியில் அழிக்கப்பட்ட விகார்கள்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
(1) காஞ்சியில், காமாட்சி அம்மன் கோயில் அருகில் வசந்தத் தோட்டத்தில் சென்னைப் பல்கலைக் கழகத் தொல்லியல் துறையினர் 1969-70ஆம் ஆண்டு நடத்திய அகழாய்வில் பௌத்த விகாரை (விகாரம் - தமிழில்) என்று கருதப்படும் சிதைந்த கட்டடம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. இக்கட்டடத்தில் சுட்ட செங்கற்களும், வட்டவடிவிலான சிறிய ஸ்தூபியின் அடிப்பகுதி ஒன்றும் காணப்பட்டது. பௌத்த ஸ்தூபி அமைப்புடைய கட்டடம் நான்கு வரிசையிலான செங்கற்களைக் கொண் டிருந்தது. கீழ் இரண்டு வரிசை வட்ட வடிவிலும், மேல் வரிசைகள் நீண்ட செவ்வக அமைப்பிலும் இருந்தன. இத்தூபி கி.மு.3-ஆம் நூற்றாண்டுக் காலத்தியதாகக் கணிக்கப்பட்டது. இக்கட்டடத்தின் கீழ்வரிசை 56 X 33 X 8 செ.மீ அளவு செங்கற்களையும், மேல் வரிசை 40 X 18 X 6 செ.மீ செங்கற்களையும் கொண்டதாக இருந்தது. இதன்கீழ் மண் அடுக்கில் “புதலதிச’ என்ற பழந்தமிழ் எழுத்துப் பொறிப்பு (தமிழ் பிராமி) உடைய சாம்பல் நிற மட்கல ஓடு ஒன்று கிடைத்தது. ‘புதலதிச’ என்பது பௌத்தத் துறவியின் பெயராக இருக்கலாம் எனப் பேராசிரியர் டி.வி. மகாலிங்கம் அவர்கள் கூறுகிறார். இந்த எழுத்துப் பொறிப்பு கி.மு.3-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருப்படுகிறது. காஞ்சியில் பௌத்த விகாரைகள் இருந்துள்ளன. பின்னாளில் அவை அழிக்கப்பட்டன என்பது தெரியவருகிறது.
(2) காஞ்சியில் உள்ள “கச்சபேசுவரர்” கோயில்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
பூர்வீக புத்தர் கோயில் எனத் தெரிகிறது. இக்கோயிலின் கோபுரத்தில் புத்த உருவங்கள் இன்றும் காணமுடிகிறது. ஒரு சில பகுதிகளில் முன்பு இருந்த புத்த உருவம் தெரியா மலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் கோயிலின் உள் மண்டபத்தின் கல் தூண்களில் புத்தர் உருவம் இருக்கின்றன. இது புத்தர் கோயில் என்பதற்கு மற்றொரு ஆதாரம், இக்கோயில் மேற்குத் திசையில் உள்ள ஏரிக்கு “புத்தேரி” என்றும் அதன் வீதிக்கு “புத்தேரித்தெரு” என்றும் இப்போதும் வழங்கி வருகின்றன. எனவே காஞ்சி கச்சபேசுவரர் கோயில் தொடக்கத்தில் புத்தர் விகாரமாக இருந்திருக்கலாம், தற்போது இந்துக் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது
காஞ்சியில் “ஏகாம்பரநாதர்” கோயில் உள்ள இடத்தில் ஆதியில் புத்த விகாரம் இருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. காரணம் ஏகாம்பரநாதர் கோயிலின் வெளி மதில்சுவரில் சில புத்த உருவங்கள் சிற்பங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ‘புத்தர் பரிநிர்வாணம்’ அடையும் நிலையில் கற்சிலை ஒன்று கோயில் கிழக்கு மதில் சுவரில் வைத்துக் கட்டப் பட்டிருக்கிறது. இதனை நோக்கும்போது பூர்வீகமாக இங்கிருந்த புத்தவிகாரம் அழிக்கப்பட்டு அக்கற்களைக் கொண்டு மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும். அதனால் தான் இந்த புத்த உருவச் சிற்பங்கள் இந்தக் கோயிலின் மதிற்சுவரில் காணமுடிகிறது.
காஞ்சியில் காமாட்சி அம்மன் கோயில், கைலாச நாதர் கோயில், வரதராசபெருமாள் கோயில், கருக்கலில் அமர்ந்தவள் அம்மன் கோயில் போன்ற இடங்களில் புத்த விகார்கள் இருந்ததாகவும், பின்னாளில் அவைகள் அழிக்கப்பட்டன என்றும் திருமதி சி.மீனாட்சி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சியில் மணிமேகலைக் கோயில்
காஞ்சிபுரம், தலைமை மருத்துவ மனையைக் கடந்து தொடர்வண்டி நிலையத்திற்குப் போகும் வழியில் “ஸ்ரீதர்ம ராஜா- திரௌபதி அம்மன்” ஆலயம் ஒன்று உள்ளது. இது முற்காலத்தில் “மணிமேகலைக் கோயிலாக” இருந்தது என்று மரபுவழி நம்பிக்கை ஒன்று நிலவி வருகிறது. தற்போது உள்ள தர்மராஜா - திரௌபதி அம்மன் கோயிலின் முன்பு இருந்த மணிமேகலை, புத்த பிக்குணிகள் சிற்பங்கள் உடைக்கப்பட்டு மூன்று கி.மீ. தூரத்தில் உள்ள நத்தப்பேட்டை ஏரி கரையில் போட்டுவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. உடைந்து, சிதைவடைந்த சிற்பங்களைத் தவிர்த்து, முழு அளவில் உள்ள மணிமேகலை, புத்த பிக்குணிச் சிற்பங்களை ஏரி கரையில் திறந்த வெளியில் வைத்து இந்து முறைப்படி வணங்கி வருகிறார்கள்.
மேலும், காஞ்சி மாவட்டத்தில், நாவலூர், மாங்காடு, பல்லாவரம், கூவம் போன்ற இடங்களில் புத்தர் (விகாரங்கள்) கோயில்கள் இருந்ததாகவும், அவைகள் அழிக்கப்பட்டு, பிற்காலத்தில் விநாயகர் கோயிலாகவும் தர்மராஜா கோயிலாகவும் மாற்றப் பட்டன எனத் தெரிகிறது என்று மயிலை சீனி.வேங்கட சாமியும், டாக்டர் டி.என்.வாசுதேவராவும் குறிப்பிட்டு உள்ளார்கள்.
காஞ்சி ஆர்ப்பாக்கம் - புத்தப் பள்ளி
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
காஞ்சிபுரம் - உத்தரமேரூர் செல்லும் சாலையில் 13-வது கி.மீ. தொலைவில் பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய நதிகளுக்கிடையே “ஆர்ப்பாக்கம்” என்ற பூர்வீக கிராமம் உள்ளது. தற்போது இந்தக் கிராமத்தில் உள்ள “ஆதிகேசவப் பெருமாள் கோயில்” முன்னோர் காலத்தில் பௌத்தப் பள்ளியாக இருந்திருக்கவேண்டுமெனக் கூறுகிறார்கள்.
இந்தக் கோயிலின் உள்ளே வெளி வட்டத்தில் ஓர் இடத்தில் நின்ற நிலையில் புத்தர் சிலை ஒன்றைக் காண முடிகிறது. இக்கோயிலின் தெற்குச் சுற்றுச் சுவரை ஒட்டிய “புத்தர் தோட்டம்” (100 ஏக்கர் நிலம் இன்றும் உள்ளது) என்ற இடத்தில் தலை உடைந்த நிலையில் புத்தர் சிலை ஒன்று காணப்படுகிறது. அடுத்து, ஐந்து அடி உயரமும், மூன்று அடி அகலமும் தாமரைப் பீடத்தில் அமர்ந்த நிலையில் இருந்த புத்தர் சிலை 25.11.2003 அன்று மர்ம ஆசாமிகளால் கடத்தப்பட்டுள்ளது. காவல் துறை வழக்கு பதிவு செய்து 10 ஆண்டுக்காலம் ஆகியும் புத்தர் சிலை கண்டுபிடிக்க முடியவில்லை. முன்னோர் காலத்தில் இந்த ஆர்ப்பாக்கம் செல்வாக்குப் பெற்ற பௌத்த பூமியாக விளங்கியது என்று மரபு வழிச் செய்திகள் உண்டு.
திருமதி.சி.மீனாட்சி அவர்களின் கூற்றுப்படி, புத்தர் சிலைகள் உள்ள புத்தப்பள்ளி தோட்டத்தில் தான் இன்றைய ஆதிகேசவப் பெருமாள் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. புத்தப் பள்ளி அழிக்கப்பட்டுள்ளது.
நிறைவாக,
""""""""""""""""""""
காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் பௌத்த சமயம் செல்வாக்குப் பெற்று கி.பி.6-ஆம் நூற்றாண்டு வரையிலும் தொடர்ந்து இருந்தது என்ற தகவல்களை, இலக்கியச் சான்றுகள், தொல்பொருள் சான்றுகள், கல்வெட்டுச் சான்றுகள், வரலாற்றுச் சான்றுகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. காஞ்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்த விகாரங்கள் இருந்துள்ளன. அதற்கான அடையாளங் களும், புத்தர் சிலைகளும் ஏராளமான அளவில் கிடைத்துள்ளன. காஞ்சிபுரத்தில் புத்தர் கோயில்கள் பல மாற்றங்களுக்கு உள்ளாகிவிட்டன. அவற்றின் அடை யாளங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.
களப்பிரர்களின் ஆரம்பக்கால ஆட்சியில் அரசு மதமாக செல்வாக்குப் பெற்றிருந்த பௌத்தம், அவர்கள் சமணம் மாறிய பின்பு, பௌத்தம் வீழ்ச்சி அடைய நேர்ந்தது. பௌத்தர்களின் இருப்பிடமான காஞ்சியில் சைவ, வைணவ மதம் செல்வாக்குப் பெற்று ஆதிக்கம் செலுத்தியபோது, பௌத்தமும் அதன் அடையாளங் களும் படிப்படியாக நலிந்து, சிதைந்து, மறைந்தது.
பயன்படுத்திய நூல்கள்
""""""""""""""""""""""""""""""""""""""""""
1. இணையத்தளம்: http :llen. wikipedia/org/ wiki.kancheepuram
2. ஏ.கே.எஸ்.விஜயகுமார் கட்டுரை, “காஞ்சிக் கோயில்களில் உற்சவங்கள்” காஞ்சி மாவட்டக் கலைகள் தொகுதி -மணிவாசகர் பதிப்பகம், சென்னை
3. டாக்டர். மா. இராசமாணிக்கனார், தமிழ்நாட்டு வரலாறு” காவ்யா வெளியீடு, 2008,
4. டாக்டர். க. வெங்கடேசன், “முற்காலத் தமிழ்நாட்டு வரலாறு” வி.சி. பப்ளிகேஷன்ஸ், இராசப்பாளையம்,
5. Prema Nandakumar, Kancheepuram, HINDU PEDIA Website
6. மயிலை சீனி.வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்
7. C. Meenakshi “Buddhism in south India” south Indian Studies,
8. Indian Archaeology - A review 1969-70-
9. Dr. K. Sivaramalingam, Archaelogical Atlas of the Antique Remains of Buddhism in Tamil Nadu, Institute of Asian studies, Chennai, 1977,
10. T.N. Vasudev Rao, Buddhism in the Tamil country, Annamalai University, 1979
11. நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத் தடயங்கள்
12 முனைவர் சீதாராம் குருமூர்த்தி, காஞ்சிபுரம் மாவட்டத் தொல்லியல் கையேடு
13. முனைவர் ஜி.ஜான் சாமுவேல், உலகளாவிய தமிழாய்வு ஓர் அறிமுகம். மற்றும்
14. களப்பணியில் சேகரிக்கப்பட்ட தகவல்கள்.
(நன்றி:தோழர். கி.நடராசன்)
















a2TOP


உத்தமர் பன்னீரின் ஊழல் சாம்ராஜ்யம்...!! பேச்சி முத்து பன்னீர் செல்வமானது எப்படி அதிரவைக்கும் ஆதாரம்!
உத்தமர் பன்னீரின் ஊழல் சாம்ராஜ்யம்
உத்தமர் பன்னீரின் ஊழல் சாம்ராஜ்யம்!
27 செப்டம்பர் 2014 அன்று பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு.   ஜெயலலிதாவிடம், விசாரணை நீதிபதியிடம் பேசியாயிற்று.   நீங்கள் விடுதலை செய்யப்படப் போகிறீர்கள் என்று கூறி, 16 பக்கம் கொண்ட தீர்ப்பு நகல் என்று ஒன்றை காண்பித்திருக்கிறார்கள்.   அதை அப்படியே நம்பிஒரு வேளை தண்டிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற எவ்விதமான தயாரிப்பு வேலையும் இல்லாமல் ஜெயலலிதா, படோடாபமாக, அதிமுக அடிமைகளை பரப்பன அக்ரஹாரா வட்டாரம் முழுக்க பேனர்களை வைக்கச் சொல்லி, ஆடம்பரமாக கையசைத்தபடி நீதிமன்றம் சென்றார்.
மற்ற அடிமைகளெல்லாம் உரிய நேரத்துக்கு வந்து விட, பன்னீர்செல்வம் மட்டும் தாமதமாக வந்தார். அவரை பெங்களுரு காவல்துறை உள்ளே அனுமதிக்கவில்லை.    கூட வந்த அல்லக்கைகள் ஃபார்மர் சீப் மினிஸ்டர் என்று குரல் கொடுத்துக் கொண்டே இருக்கவும், காவல்துறை அவரை உள்ளே அனுப்பியது.  12 மணிக்கெல்லாம், ஜெயலலிதாவை குற்றவாளி என்று நீதிபதி குன்ஹா அறிவித்ததும், ஜெயலலிதாவுக்கான தண்டனை என்ன என்பதற்கான வாதத்துக்கு முன் ஜெயலலிதா தரப்பில் ப்ரேக் வேண்டும் என்று கேட்கப்பட்டதுஅதையடுத்து அரை மணி நேரம் நீதிமன்றத்தை ஒத்தி வைத்தார் குன்ஹா.
அந்த இடைவெளியில் பன்னீர்செல்வத்தை அழைத்து, முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொள்ளச் சொன்னார் ஜெயலலிதா.   அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டாம் என்றும் கூறினார்.
29 செப்டம்பர் 2014 அன்று பதவியேற்பு நிகழ்ச்சி ஆளுனர் மாளிகையில்.   முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்ள .பன்னீர்செல்வத்தை ஆளுனர் அழைக்கிறார்.    .பன்னீர்செல்வம் என்னும் நான் என்று ஆளுனர் படித்ததும், அவர் பின்னால் உறுதிமொழியை படிக்க வேண்டிய பன்னீர்செல்வம், தலையை கவிழ்த்து, கண்ணீர் சிந்தி, பாக்கெட்டில் இருந்து வெண்ணிற கைக்குட்டையை எடுத்து, கண்களில் சிந்திய நீரை துடைத்துக் கொண்டார்.
பார்த்தவர்கள் உருகிப் போனார்கள்.   அம்மாவின் மீது இப்படி ஒரு விசுவாசமா என்று.   இதே போல, ஜெயலலிதாவின் கார் டயர்களையெல்லாம் தொட்டு வணங்கி, இதர அதிமுக அடிமைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் பன்னீர்.    ஆனால் இப்படிப்பட்ட பன்னீரை, 2016 மார்ச் முதல், ஜெயலலிதா ஓரங்கட்டி, அவர் குடும்பத்தினரையும்  வழக்குகளில் சிக்கவைத்தார் என்று தகவல்கள் வெளியாகின.
பன்னீரை நன்கு அறிந்தவர்கள், அவரைப் போல அம்மா விசுவாசியை பார்க்கவே முடியாது என்பார்கள்அத்தனை விசுவாசம், பக்தி.   அந்த விசுவாசத்துக்கும் பக்தியும், ஒரு கனமான முகமூடி என்பதையும், போலியாக நடித்து, எப்படி ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை பன்னீர்செல்வம் கட்டியமைத்திருக்கிறார் என்பதையும் பார்ப்போம்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்திருப்பதுதான் ரோசி டீக்கடைஇந்த ரோசி டீக்கடையின் உரிமையாளர் பன்னீர்செல்வம் என்பவர், தமிழகத்துக்கு மூன்று முறை முதலமைச்சராக இருக்கப் போகிறார் என்பதை, ஆரம்ப காலத்தில் அந்த டீக்கடைக்கு வருகை தந்தவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.  
பெரியகுளத்தில் உள்ள தென்கரை என்ற இடத்தில் அமைந்துள்ள 10 வீடுகளும் பன்னீர்செல்வத்துக்கு சொந்தமானவை.   தெற்கு அக்ரஹாரத் தெருவில் உள்ள பெரிய வீட்டில்தான் பன்னீர்செல்வம் பெரியகுளம் வந்தால் தங்குவார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புதூர்தான் பன்னீர்செல்வம் குடும்பத்தின் பூர்வீகம்.   அவர்கள் தேனி மாவட்டத்துக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னால் குடிபெயர்ந்து வந்துள்ளார்கள்பன்னீர்செல்வத்தின் குலதெய்வக் கோவிலான பேச்சியம்மன் கோவில் ஸ்ரீவில்லிப்புதூரில்தான் உள்ளதுஇன்றும், அமாவாசை பவுர்ணமி போன்ற தினங்களில் நடக்கும் பூஜைகளுக்கான செலவுகளை பன்னீர்செல்வம் குடும்பம்தான் இன்றும் ஏற்கிறது.
பன்னீர்செல்வத்தின் தந்தை ஓட்டக்காரத் தேவர், அந்தப் பகுதிக்கு வரும் லாரிகளின் ட்ரைவர்களுக்கு சிறிய அளவில் வட்டிக்கு பணம் விடும் தொழில் செய்து வந்தார்.    எண்பதுகளின் இறுதியில் டீக்கடை வைக்கும் முடிவில் இறங்கும் பன்னீர்செல்வத்துக்கு அதற்கு தேவையான சிறிய முதலீட்டை செய்யக் கூட வசதி இல்லைஅவரும், பன்னீரின் பால்ய காலத் தோழர் விஜயனும் சேர்ந்து டீக்கடை வைக்க முடிவு செய்கின்றனர்.   பெரியகுளத்தில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் 20 ஆயிரம் கடன் பெறப்படுகிறது. பன்னீரின் தம்பி  பாலமுருகன் பெயரில் கடன் பெறப்படுகிறதுபன்னீர்செல்வம் அந்த கடனுக்கு உத்தரவாத கையெழுத்து போடுகிறார்.
ஆனால் உரிய நேரத்துக்குள் கடன் திருப்பிச் செலுத்தப்படவில்லைகடன் திருப்பிச் செலுத்தப் படாததை அடுத்து, வங்கி கடனை வசூல் செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்குகிறது.   பன்னீர் செல்வத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
பன்னீர்செல்வத்தின் உண்மையான பெயர் பேச்சிமுத்து.     வங்கி நடவடிக்கை எடுத்ததையொட்டி, பன்னீர்செல்வம் தன் அசல் பெயரான பேச்சிமுத்து என்ற பெயரை மாறி, பன்னீர்செல்வமாக அவதாரம் எடுக்கிறார்.   இந்தக் கடன், பன்னீர்செல்வம் முதலமைச்சரான பின்னர், 2003ம் ஆண்டு திருப்பிச் செலுத்தப்படுகிறது.
பேச்சிமுத்து என்ற பன்னீர்செல்வம், 20 ஆயிரம் கடனை திரும்ப செலுத்த முடியாமல், வங்கிக்கு அஞ்சி பெயர் மாற்றிக் கொண்டதற்கு வங்கி ஆவணங்கள் இன்னும் சான்றாக உள்ளன.
பிவி கேன்டீன் என்ற பெயரில் இருந்த அந்த டீக்கடையை, பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா தற்போது நடத்தி வருகிறார்.   ராஜாவின் மகள் ரோசி திடீரென்று மரணமடையவும், பிவி கேன்டீன் ரோசி கேன்டீன் என்று பெயர் மாற்றம் பெறுகிறது.
டீக்கடையை நடத்திக் கொண்டே பன்னீர்செல்வம், ரியல் எஸ்டேட் ப்ரோக்கராகவும் உபரித் தொழிலில் இறங்குகிறார்.    அந்தப் பகுதியில் நீண்ட நாள் வாழ்ந்து வரும் ஒருவர், கவிஞர் வைரமுத்து, பெரியகுளம் புள்ளக்காபட்டியில் 12 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கும் நில பேரத்தை முடித்துக் கொடுத்து, வைரமுத்துவிடம் கமிஷன் பெற்றார் பன்னீர் என்பதை நினைவு கூர்கிறார்.
ஒரு டீக்கடை உரிமையாளராகவும், ரியல் எஸ்டேட் ப்ரோக்கராகவும் இருந்த பன்னீர்செல்வத்தின் வாழ்க்கை பரமபத விளையாட்டைப் போல செங்குத்தாக உயரே சென்றது.    உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பன்னீர்செல்வம், பெரியகுளம் நகராட்சியின் தலைவரானார்அவரை அந்தப் பதவியில் அமர்த்தியது, டிடிவி தினகரனுடனான அவரது அறிமுகம்.    2001ல், ஜெயலலிதா டான்சி வழக்கில் தண்டிக்கப்பட்டபோது இடைக்கால முதல்ரான பன்னீர்செல்வத்தின் வளர்ச்சி, அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிகாந்தின் வளர்ச்சியை விட விரைவானது.
பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகையில் தனது சொத்தாக பன்னீர்செல்வம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்த சொத்துக்கள் ஒரு ஏக்கர் விவசாய நிலம்ஒரு டீக்கடை. 25 சவரன் தங்க நகை மற்றும் தன் மனைவி விஜயலட்சுமி பெயரில் உள்ள 7.61 லட்சம் மதிப்புள்ள வீடு.
2016 தேர்தலில் போட்டியிடுகையில் பன்னீர்செல்வம் வெளியிட்ட சொத்துக்கள்.   அசையும் சொத்துக்கள் 8.6 லட்சம்அசையா சொத்துக்கள் 33.20 லட்சம்.   கடன் 25 லட்சம்.   மனைவியின் சொத்துக்களாக 200 கிராம் தங்கம், 26.32 அசையும் சொத்துக்கள்,  26,32 லட்சம்.   27 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் 2000 சதுர அடி வீடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
2006ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், உத்தமர் பன்னீர்செல்வம் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.    ஜெயலலிதா கூட சொத்துக் குவிப்பு வழக்கில் தப்பிக்க முடியவில்லைஆனால் பன்னீர்செல்வம், சட்டத்தில் உள்ள நூதனமான ஓட்டைகளை பயன்படுத்தி லாவகமாக தப்பித்தார்.
லஞ்ச ஒழிப்புத் துறை, பன்னீர்செல்வம், அவர் மனைவி விஜயலட்சுமி, பன்னீர் மகன் ரவீந்திரநாத் குமார்அவர் சகோதரர் .ராஜா, ராஜாவின் மனைவி சசிகலாவதி, மற்றொரு சகோதரர் .பாலமுருகன் மற்றும் அவரது மனைவி லதா மகேஷ்வரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ததுகுற்றப் பத்திரிக்கையின்படி, வழக்கு காலமான 19.05.2001 அன்று உள்ளபடி, பன்னீர்செல்வத்தின் சொத்து 17,44,840.   வழக்கு காலத்தில் அவரது வருமானம், 46,05,454.   இந்த காலகட்டத்தில் செலவு 67,82,569.
வருமானம், செலவு ஆகியவற்றை கூட்டி கழித்துப் பார்த்தால், வழக்கு கால இறுதியில், பன்னீர்செல்வம், அவர் பெயரிலும் அவர் பினாமி பெயர்களிலும் 1,72,03,116  அதாவது ஒரு கோடியே 72 லட்சம் சொத்து சேர்த்ததாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.   இந்த வழக்கையே லஞ்ச ஒழிப்புத் துறை சரியாக புலன் விசாரணை செய்யவில்லைசரியான முறையில் விசாரணையை மேற்கொண்டிருந்தால், பன்னீர்செல்வத்தின் சொத்து, 2006 காலகட்டத்திலேயே குறைந்தது 20 கோடியை தாண்டியிருக்கும்.
2009ம் ஆண்டில் இந்த வழக்கு, தேனி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.   இந்த நீதிமன்றத்தில் பன்னீர்செல்வமும் அவர் குடும்பத்தினரும் தொடர்ந்து ஆஜராகி வருகின்றனர்.   ஆனால் வழக்கு விசாரணை தொடங்கவில்லைஒரு வழக்கிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை விடுவிக்கக் கோரி, மனு தாக்கல் செய்ய உரிமை உண்டுஆனால் பன்னீர்செல்வம், விடுவிப்பு மனுவுக்கு பதிலாக, வழக்கை மேலும் புலனாய்வு செய்ய வேண்டும் என்று ஒரு மனுவை தாக்கல் செய்கிறார்.   அந்த மனுவை நீதிமன்றம் அனுமதிக்கிறது.
இதற்கிடையே லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுவழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்குகிறதுஅங்கே தேனி நீதிமன்றம் வழக்கை மேலும் விசாரணை செய்ய உத்தரவிட்டிருப்பதாக பன்னீர் மனுத் தாக்கல் செய்கிறார்ஆனால் அந்த மனு நிராகரிக்கப்படுகிறது.    மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்யக் கூடாது என்று மனுத் தாக்கல் செய்து, விசாரணையை சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றுகிறார் பன்னீர்செல்வம்.   2011ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, லஞ்ச ஒழிப்புத் துறையும் பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் வருகிறது.   அரசு வழக்கறிஞர்கள் அனைவரும் அதிமுகவினராக நியமிக்கப்படுகிறார்கள்.
2012ல், சிவகங்கை நீதிமன்றம், பன்னீர்செல்வம் மீது போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்கிறது.    இந்த வழக்கில் பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரானது அவரது மகள் வழி சம்பந்தி செல்லபாண்டியன்பின்னாளில் அவர் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞராக ஆனார்.
ஆனால் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் உருவாக்கியுள்ள சாம்ராஜ்யம், பெரும் தொழிலதிபர்களையும் வெட்கம் கொள்ளச் செய்யக் கூடியது.
பன்னீர்செல்வத்தின் மகன்கள் முதலில் செய்த முதலீடு பல ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய ஜெயவந்த் என்டர்பிரைசஸ்பழைய பொருட்களை மொத்தமாக வாங்கும் நிறுவனம் இது.    தேனியை சேர்ந்த அதிமுக பிரமுகரான ராஜகுரு நாயுடுவின் அறிவுரையின் பேரில், திருப்பூரில் ஒரு நூற்பாலையில் முதலீடு செய்கின்றனர். திருப்பூரில் ஏற்கனவே நூற்பாலை தொழிலில் இருந்த ஹரிசந்திரன் மற்றும் ஞானசேகரன் என்பவர்களின் அறிமுகம் கிடைக்கிறது.   அதன் பிறகு சுக்கிர திசைதான்.
வாணி பேப்ரிக்ஸ் என்ற நிறுவனத்தில் பன்னீரின் மகன்கள் ரவீந்திரநாத் குமார் மற்றும், ஜெயப்ரதீப் ஆகியோர் சேர்ந்து 12 கோடி முதலீட்டில்,   தொடங்குகின்றனர்.   15 கோடி முதலீட்டில் வாணி ஸ்பின்னர்ஸ்.  8 கோடி முதலீட்டில் வாணி டெக்ஸ்டைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஜவுளித் துறையில் மட்டும்இந்த நிறுவனங்கள், எண் 5, தட்டான் தோட்டம், இரண்டாவது குறுக்குத் தெரு, பல்லடம் சாலை, திருப்பூர் என்ற முகவரியில் இருந்து இயங்குகின்றன.
இதன் பிறகு பிரம்மாண்ட வளர்ச்சியை கண்ட மற்றொரு நிறுவனம் எக்செலன்ட் மெரைன்லைன் ப்ரைவேட் லிமிட்டெட் (Xllent Marine Line Private Limited).  அண்ணா சாலையில் அமைந்துள்ள ரஹேஜா டவர்ஸில், இதன் அலுவலகம் அமைந்துள்ளது.    2016க்கு முன்பாக, கன்டெய்னர்களை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் லாஜிஸ்டிக்ஸ் தொழில் நடத்தி வைத்த இந்த நிறுவனம், 2016க்கு பிறகு, திடீர் வளர்ச்சியை அடைந்துள்ளது.   தற்போது இந்த நிறுவனத்தின் இணையதளம் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எந்த பொருளை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக் கூடிய மிகப் பெரும் நிறுவனம் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறதுபல நாடுகளில் இந்நிறுவனத்துக்கு அலுவலகம் உள்ளன.
இந்த நிறுவனத்தில் மொத்தம் 8 இயக்குநர்கள் உள்ளனர்.   17 ஆகஸ்ட் 2016ல், பன்னீரின் மகன்கள் ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் ஆகியோர் பங்குதாரர்களாக இணைகிறார்கள்இந்த நிறுவனத்தில் இயக்குநராக உள்ள ராஜேந்திரன் தரணி என்பவர் பன்னீர் மகன் ரவீந்திரநாத்தின் நெருக்கமான நண்பர்.    இந்த தரணியின் தொடர்பு காரணமாக மேலும் பல்வேறு புதிய நிறுவனங்களில் பன்னீர்செல்வத்தின் மகன்கள் முதலீடு செய்துள்ளனர்.
திருப்பூரில் இருந்து செயல்பட்டு வரும், எச்எஸ்வி கார்ப்பரேஷன் சோலார் என்ற நிறுவனம் 5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.   பன்னீர் மகன்களின் நிறுவனங்களில் பங்குதாரராக உள்ள ஹரிசந்திரன் இதிலும் பங்குதாரராக உள்ளார்.    ரவீந்திரநாத் மற்றும் செந்தில்குமார் என்பவர் பங்குதாரராக உள்ள மற்றொரு நிறுவனம், பாண்டி பஜார், ரெயின்போ ஆர்கேடில் இருந்து இயங்கும் வில்லோ நெட்இந்த நிறுவனத்தில் முதலீடு 50 லட்சம்சென்னை,ராஜா அண்ணாமலை புரத்தில் இருந்து இயங்கும் மற்றொரு நிறுவனம் ஜெயவந்த் என்டர்பிரைசஸ்.   இதில் பன்னீர் மகன்களின் முதலீடு 50 லட்சம்.   மற்றொரு நிறுவனமான மேட்ரிக்ஸ் மீடியா டிசைன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம், குமார் கிருஷ்ணா, எண் 56, 2வது மெயின் ரோடு, ராஜா அண்ணாமலை புரம் என்ற முகவரியில் இருந்து இயங்குகிறதுஇதில் இவர்களின் முதலீடு 75 லட்சம்.    இந்த நிறுவனம் திரைப்படம் மற்றும் தயாரிப்பு வேலைகளில் ஈடுபடும் ஒரு நிறுவனம்.
பன்னீர் மகன்கள்  பங்குதாரர்களாக உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயர் க்ளோபல் ஹோம் ரியாலிட்டீஸ். இது தேனி மாவட்டத்திலிருந்து இயங்குகிறதுஇதில் இவர்களின் முதலீடு 10 கோடி.
இது வரை குறிப்பிட்ட நிறுவனங்களில்   பன்னீரின் மகன்கள் கணக்கில் காட்டிய பணத்தை முதலீடு செய்தது மட்டுமே 70 கோடியை தாண்டுகிறது.
பன்னீரின் மகன்கள் ரவீந்திரநாத், மற்றும் ஜெயப்ரதீப் தவிர்த்து, பன்னீரின் மகள் கவிதா பானு ஆகியோர் முதலீடு செய்து நடத்தப்பட்டு வரும் நிறுவனம், விஜயந்த் டெவலப்பர்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்இந்த நிறுவனம், ஃப்ளாட் எண் எஸ்.2, சல்மா க்ரீன் கேஸ்சில், 154, க்ரீன்வேஸ் சாலை, ராஜா அண்ணாமலை புரம்சென்னை 28 என்ற முகவரியில் இருந்து இயங்கி வருகிறது.
இந்த சல்மா க்ரீன் கேஸ்சில் அடுக்குமாடியில், பன்னீரின் மகன் ஜெயப்ரதீப் பெயரில் 2வது தளத்தில் வீடு உள்ளது.   பன்னீர்செல்வம் மற்றும் அவர் மகள் கவிதா பானு பெயரில் 3வது தளத்தில் ஒரு வீடு உள்ளது.
இது தவிர, பசுமை வழிச்சாலையிலேயே, கேஜீஎஸ் என்ற பெயரில் ஒரு உயர் ரக சொகுசு மாடிக் குடியிருப்பு உள்ளதுஇந்த குடியிருப்பில் மிகப் பெரிய வீடு ஒன்று, பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின் நண்பர் gஅஷ்வின் என்பவர் பெயரில் உள்ளது.    இந்த வீட்டில்தான் தற்போது ரவீந்திரநாத் குடியிருந்து வருகிறார்.   அஷ்வினிடம் இருந்து வாடகைக்கு இந்த வீட்டில் இருப்பதாக ஒப்பந்தமெல்லாம் போடப்பட்டு உள்ளது. இந்த அஷ்வினின் தந்தை பாஷ்யம் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.   சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் இது ஒன்று.    இந்த கட்டுமான நிறுவனத்தில்தான், பன்னீர்செல்வத்தின் கருப்புப் பணம் முதலீடு செய்யப்படுகிறது.
இந்த நிறுவனங்களில் பன்னீரின் மகன்கள் மற்றும் மகள் செய்துள்ள முதலீடுகள் அனைத்தும் வெள்ளையாக கணக்கு காண்பித்த பணம் மட்டுமே.   பெரியகுளத்தில் உள்ள ஒரு பிரபலமான கோவில் பாலமுருகன் கோவில்இந்த கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுவதற்காக தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றனஇந்த கோவில் திருப்பணிக்காக ஒரே காசோலையில் பன்னீரின் மகன் 95 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார்.
இது போக ஓட்டக்காரத் தேவர் கல்வி அறக்கட்டளை என்று ஒரு ட்ரஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது.   பன்னீரின் தம்பி ராஜா, அவர் மனைவி சசிகலாவதி, மகன் அமர்நாத் மற்றும் பன்னீரின் சகோதரி ஒருவர் இதன் நிர்வாகிகளாக உள்ளனர்.  15 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இந்த அறக்கட்டளை பெயரில் உள்ளன.
இப்படி கணக்கு காட்டும் பணத்தையே தண்ணீர் போல இரைக்கும் அளவுக்கு இவர்களிடம் பணம் கொட்டிக் கிடக்கிறதென்றால், கணக்கில் வராத கருப்புப் பணம் எவ்வளவு இருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.
பன்னீரும் ஏலக்காயும்:
போடிநாயக்கனூர், ஏலக்காய் வியாபாரத்துக்கு பெயர் போன ஊர்.   மூணாறு மற்றும் போடி பகுதியில் விளையும் ஏலக்காய்கள் அனைத்தும் போடியில்தான் ஏலம் விடப்படும்இந்த ஏலக்காய் வியாபாரத்தை முழுமையாக பன்னீர்செல்வமும் அவர் பினாமிகளுமே கட்டுப்படுத்துகிறார்கள்.    இந்தப் பகுதியில் உள்ள திமுகவினர் கூட, இந்த வியாபாரத்தில் பன்னீருக்கு உடந்தையாகவே உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட பிறகு, பன்னீர் முதல்வராக இருந்தார்.   அந்த நேரத்தில், தமிழக அரசின் வணிக வரித் துறை ஏலக்காய் மீதான வணிக வரியை 5 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைத்து உத்தரவிட்டது.    பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தாலும், முக்கிய கோப்புகள் அனைத்தும், போயஸ் தோட்டத்துக்கு அனுப்பப்பட்டு அதில் ஜெயலலிதா பென்சிலில் குறிப்புகள் எழுதிய பிறகே அரசாணைகள் வெளியிடப்படும்.
அவ்வாறு போயஸ் தோட்டத்துக்கு அந்த கால கட்டத்தில் அனுப்பப்பட்ட கோப்புமொபைல் போன்கள், நூலிழை மற்றும் ஏலக்காய்க்கான வரி குறைப்பு சம்பந்தமாக கோப்பு.   அந்த கோப்பு போயஸ் தோட்டத்திலிருந்து திரும்ப வருகையில், ஜெயலலிதா, மொபைல் போன்களுக்கு மட்டுமே பென்சிலில் குறியீடு செய்திருந்தார்.
ஆனால் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டபோது, ஏலக்காய், நூலிழை மற்றும் மொபைல் போன்களுக்கும் வரி குறைப்பு செய்யப்பட்டிருந்தது.   ஏலக்காய் வரி குறைப்பினால் மட்டும், அரசுக்கு இரண்டு ஆண்டுகளில் 3000 கோடி ரூபாய் வரியிழப்பு ஏற்பட்டது என்றும் அந்த அதிகாரி கூறினார்.
கிணத்தை காணோம்:
பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் ஊர் மக்கள் பயன்பாட்டுக்காக தேவைப்படும் ஒரு கிணற்றை பன்னீர் குடும்பம் தராமல் மறுத்து வந்த தகவல் வெளியானது.    அந்த நிலமும், கிணறும், பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி பெயரில் இருந்தது.
அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாவிட்டாலும், கிணற்றை சுற்றி போர் மோட்டார்கள் நீர் இறைத்துக் கொண்டிருக்கும்.   அந்த தண்ணீரின் மூலம் பன்னீர்செல்வத்தின் தோட்டம் மற்றும் வயல்களுக்கு நீர் பாய்ச்சப்படுகிறது.   இதன் காரணமாக சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர் வெகுவாக குறைகிறது என்பது ஊர் மக்களின் புகார்.
ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து, அந்த கிணற்றையும் அதை சுற்றியுள்ள நிலத்தையும் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதென முடிவெடுத்தனர்.   ஆனால் பன்னீர் குடும்பம், நிலத்தை விட்டுத் தர மறுத்ததுமக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
விவகாரம் பெரிதாகும்போதுதான் ஒரு விஷயம் வெளியே வந்தது.     கிணறு தொடர்பாக பிரச்சினை பெரிதானதும், பன்னீரின் மனைவி விஜயலட்சுமி தன் பெயரில் இருந்த நிலத்தை, பன்னீரின் நெருங்கிய நண்பரான சுப்புராஜ் என்பவர் பெயருக்கு மாற்றியுள்ளார்.   தர்மயுத்தம் முடிவடைந்து, பன்னீர்செல்வம் துணை முதல்வரான நாளன்று, சுப்புராஜ் கிணற்றை ஊர் மக்களுக்கு தானமாக எழுதிக் கொடுத்தார்.
இந்த சுப்புராஜ் என்பவரே, பன்னீர்செல்வத்தின் பினாமிதான்.   இவருக்கும் பன்னீர்செல்வத்துக்கும் பல முறை நில விற்பனை நடந்துள்ளது.   பெரியகுளம் பகுதியில், சுப்புராஜ் பாப்பா பில்டர்ஸ் என்ற ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.   டிசம்பர் 2010ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், ஒரு சில ஆண்டுகளிலேயே பல மடங்கு வளர்ந்துள்ளது.
சுப்புராஜின் பாப்பா பில்டர்ஸ் நிறுவனம் பெரும்பாலும் செய்யும் கட்டுமானப் பணிகள் நெடுஞ்சாலைத் துறை.  2011 முதல் 2016 வரை, பன்னீர்செல்வம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பன்னீர்செல்வத்தின் மகன்கள், ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மற்றும் சுப்புராஜ் ஆகிய மூவரும் இணைந்து நடத்தும் நிறுவனம்தான் க்ளோபல் ஹோம் ரியாலிட்டீஸ் என்ற மற்றொரு கட்டுமான நிறுவனம்பன்னீரின் மகன்கள் இந்நிறுவனத்தில் 90 சதவிகித பங்குகளை வைத்துள்ளார்கள்.   இந்த க்ளோபல் நிறுவனம், பெரியகுளத்தில் 150 ஏக்கர்களை விலைக்கு வாங்கி, அதில் கட்டுமானம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போஜராஜன் ஜவுளி ஆலை:
தேனியில்   அமைந்துள்ள ஒரு ஜவுளி ஆலைதான் போஜராஜன் ஜவுளி ஆலை. இந்த ஆலைக்கு அருகே 99 ஏக்கர் அரசு நிலம் உள்ளது.  1967ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலை சில ஆண்டுகளுக்கு முன் செயலிழந்தது. ஆலையின் அருகே இருந்த அரசு நிலத்தை 99 ஆண்டுகளுக்கு அரசு இந்த ஆலைக்கு குத்தகைக்கு அளித்திருந்ததுஇந்த குத்தகை 2011-12ல் முடிந்தது.   இந்த மில்லை நடத்தி வந்த வட இந்தியரை, மில் தொழிலாளிகளே 2011ம் ஆண்டு கொலை செய்து விட்டனர்.
அதன் பிறகு, இந்த ஆலையை, கோவிந்தராஜன் தாமோதரன், முத்து கோவிந்தன் ஆகியோர் வாங்கி விடுகின்றனர்.   இந்த மில் நிர்வாகத்தில் தற்போது இயக்குநர்களாக உள்ள ரங்கசாமி, முத்துகோவிந்தன், தாமோதரன், பழனிதாஸ், குருசாமி, ராஜகோபால் நாயுடு மற்றும் சுப்ரமணியம் ஆகிய அனைவருமே பன்னீர்செல்வத்தின் பினாமிகள் என்றே தேனி வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
2012ம் ஆண்டு, சந்தை மதிப்பில் 140 கோடி பெறுமானமுள்ள 99 ஏக்கர் அரசு நிலத்தை, வெறும்  60 கோடிக்கு விற்பனை செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.    சமீபத்தில் தேனியில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, இந்த ஆலையின் மைதானத்தில்தான் நடந்தது.
சேகர் ரெட்டியும் பன்னீர்செல்வமும்:
ஒரு பத்து நாட்களுக்கு முன், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், சேகர் ரெட்டி குறித்த விசாரணை என்ன ஆனது  என்று கேள்வி எழுப்பியிருந்தார்.   ஒரு சில நாட்களிலேயே, ஸ்டாலினை விமர்சித்து முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஒரு பேட்டியளித்தார்அதில் ஸ்டாலினுக்கும் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு உள்ளது என்றார்.
இதையடுத்து சேகர் ரெட்டி சார்பில், நாளிதழ்களில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டதுஅதில் சேகர் ரெட்டியையும் சில அரசியல்வாதிகளையும் தொடர்புபடுத்தி சிலர் பேசி வருவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும், லாரிகளையும், பொக்லைன் இயந்திரங்களையும் வாடகைக்கு விட்டு, தொழில் நடத்தும் ஒரு நேர்மையான தொழிலதிபர்தான் சேகர் ரெட்டி என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது.   மேலும், சேகர் ரெட்டியின் வீட்டில் நடந்த சோதனைகளில், வெறும் 12 லட்சம் மட்டுமே கைப்பற்றப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
வருமான வரித் துறை கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்திய சோதனைகளின்போது, 96.89 கோடி ரூபாய் பழைய நோட்டுகள், 9.63 கோடி ரூபாய் புதிய 2000 நோட்டுகள், 127 கிலோ தங்கம், 24 கோடி 2000 நோட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்த பணம் மற்றும் தங்கத்தோடு, சேகர் ரெட்டி அலுவலகத்திலிருந்து, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பணம் வழங்கிய கணக்கு எழுதப்பட்ட டைரியும் கைப்பற்றப்பட்டது.   அந்த டைரிகளில், 2016ம் ஆண்டுக்கான கணக்கு எழுதப்பட்ட டைரிகளின் பக்கங்கள் நமக்கு கிடைத்தனஅதன் விபரங்களை பார்ப்போம்.
முதல் பக்கத்தின் தலைப்பிலேயே ஹெல்த் என்று போடப்பட்டு 2 மற்றும் 3 என்று மொத்தம் 5 கோடி காண்பிக்கப்பட்டுள்ளது.   அது சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அடுத்ததாக நமக்கு தெரிந்த பெயர் வன்னி அரசுஅவருக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள தொகை 1 லட்சம்.   அதன் பின் பெரியவர் மற்றும் பெரியவர் / ரமேஷ் என்ற பெயருக்கு நேரே குறிப்பிடப்பட்டிருக்கும் தொகைகள் அனைத்தும் பன்னீர்செல்வத்துக்கு தரப்பட்டவை.   ரமேஷ் என்பவர், பன்னீர்செல்வத்தின் பி..
17.06.2016 என்ற தேதியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், மின் துறை அமைச்சர் தங்கமணி.   தொகை 50 லட்சம்.   அதே தேதியில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு பெயர் நெற்றிக்கண் ஆசிரியர்தொகை 2 லட்சம்.
21.06.2016 தேதியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் கிருஷ்ணசாமிதொகை 5 லட்சம்.  22.06.2016 அன்று குறிப்பிடப்பட்டுள்ளது, ரெவின்யூ பிஎஸ்ஓவருவாய் துறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிதொகை 25 ஆயிரம்.
27.6.2016 ஹெல்த்தொகை 1 கோடி.    28.06.2016.  மன்னார்குடி மகாதேவன் தொகை 10 லட்சம்.   மன்னார்குடி மகாதேவன் சமீபத்தில் இறந்து போன மன்னார்குடி மாபியாவின் முக்கிய புள்ளி.
28.08.2016 கடலூர் கலெக்டர்  தொகை 10 லட்சம்அதே நாளில் ஜுன், ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் என்று நான்கு மாதங்களுக்கு தலா 25 லட்சம் வீதம் 1 கோடி ரூபாய் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  31.08.2016.   வழக்கறிஞர் காசிதொகை 1 கோடிஇவர் பன்னீர்செல்வத்தின் மருமகன் காசிராஜன்.
28.10.2016 விபி.கலைராஜன் (தி.நகர் எம்எல்ஏ) தொகை 5 லட்சம்அதன் பிறகு 28.10.2016 தேதிகளில் ஓபிஎஸ் ரமேஷ், ஓபிஎஸ் அட்வகேட் என்ற பெயருக்கு நேராக தலா 37 லட்சம் மற்றும், கார்டன் போனஸ் என்ற பெயருக்கு நேராக 3,85 லட்சமும், 31.10.2016 தேதிக்கு நேராக கார்டன் செலவு என்று 20 லட்சமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
31.10.2016 அன்று, கார்டன் செலவுக்கு என்று, பன்னீர்செல்வம் பிஏ ரமேஷ் 20 லட்சத்தையும், கார்டன் போனஸ் என்று 3.85 லட்சத்தையும் வாங்கியிருக்கிறார். பன்னீர்செல்வத்தின் பிஏ ரமேஷ் 31.10.2016 அன்று ஒரு கோடி பெற்றிருக்கிறார்.
டைரியின் முதல் பக்கத்தில் 23.11.2016 மற்றும் 28.11.2016 ஆகிய தேதிகளில் விஜயபாஸ்கர் (ஹெல்த் மினிஸ்டர்) என்ற பெயரில் 2 + 3 என்று 5 கோடிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 22 செப்டம்பர் 2016 அன்று ஜெயலலிதா அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
31.10.2016 அன்றைய நாளிட்ட பதிவில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பெயருக்கு நேராக ஒன்றரை கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், நலமாக இருக்கிறார் என்று வெளியே கண்ணீர் உகுத்து விட்டு, இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது தெரிகிறதா ?
சேகர் ரெட்டி எப்படி ஒட்டுமொத்த அரசாங்கத்தையே நடத்தி வந்துள்ளார் என்பது இந்த பட்டியலை பார்த்தால் தெரியும்ஆனால் இதற்கு முன்பு இருந்தது போல, தற்போது சேகர் ரெட்டிக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை.
சென்னையிலிருந்து கன்னியாக்குமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை பைபாஸ் அருகே இருக்கும் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 கிலோ மீட்டர் சாலை மட்டும் நான்கு வழி சாலை கிடையாதுஇந்த சாலையை நான்கு வழி சாலையாக்குவதற்கான டெண்டர் ஒரு வருடத்துக்கு முன்பு வெளியிடப்பட்டது.
அந்த டெண்டரை, மதுரையில் எஸ்பிகே ஹோட்டலை  நடத்தி வரும் அதன் உரிமையாளர் நாகராஜன், சேகர் ரெட்டி மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தி ஆகியோர் எடுத்துள்ளனர்.   டெண்டருக்கான மொத்த மதிப்பீடு 110 கோடி.   சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறை சென்றதும், இந்தப் பணி அப்படியே நின்று போனது.
இதன்பின், தற்போது மீண்டும் டெண்டர் விடப்பட்டுள்ளதுஇந்த டெண்டரை தற்போது எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள், எஸ்கேபி ஹோட்டல் உரிமையாளர் நாகராஜன், மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் மகன்தற்போது டெண்டரின் மதிப்பு 200 கோடியாக உயர்ந்துள்ளது.
தற்போது இதையடுத்த வளர்ச்சி என்னவென்றால், மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலம் கையப்படுத்தப்பட உள்ளதுஇதற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தில், புதிதாக உருவாக்கப்பட உள்ள நான்குவழிச் சாலையும் அடங்கும்.
தற்போது எடப்பாடியின் மகனும் எஸ்பிகே ஹோட்டல் நாகராஜனும் கூறுவது என்னவென்றால், விமான நிலைய நில கையப்படுத்தலை தாமதப்படுத்துங்கள், அதற்குள் நான்கு வழிச் சாலை அமைத்ததாக பில் போட்டு விடுவோம் என்பதுதான்.
விமான நிலைய ஆணைய அதிகாரிகள், என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது வழக்குகளில் சிக்கியுள்ளதால், சேகர் ரெட்டி பழைய செல்வாக்கு இல்லாமல் இருக்கிறார்.   விரைவில் வழக்கிலிருந்து விடுதலையாகி, பழைய செல்வாக்கை அடைந்ததும், எடப்பாடி பழனிச்சாமியையும் தன் வலைக்குள் வீழ்த்துவார் சேகர் ரெட்டி.
எடப்பாடி பழனிச்சாமி அரசாங்கத்தை ஊழல் அரசு என்று மக்கள் கூறுகிறார்கள் என்று தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருக்கையில், பன்னீர்செல்வம் கூறியது நினைவிருக்கலாம்.
இப்போது யார் பெரும் ஊழல்வாதி என்பது புரிகிறதா ?   இதுதான் உத்தமர் பன்னீர்செல்வத்தின் ஊழல் சாம்ராஜ்யம்.   அணிகள் இணைந்த பிறகு, கடும் முரண்பாடுகள் இருந்தாலும் பன்னீர்செல்வம் எது குறித்தும் வாய் திறக்காமல் ஏன் இருக்கிறார் என்பது தெரியுமாஒரு நாள் போனாலும் வசூல் பாதிக்கப்பட்டு விடக் கூடாதே என்பதுதான்.
ஒரு மாதத்துக்கு முன், பன்னீர்செல்வத்தின் மகன்கள், மலேசியாவில் உள்ள ஒரு தொழிலதிபரின் உதவியோடு ஒரு பெரும் கல்வி நிலையத்தை வாங்கியுள்ளனர்.   இந்தோனேசியாவில் முதலீடு செய்வதற்காக தொழில்களை தேடி வருகின்றனர்இவை எதுவும் பாதிக்கப்பட்டு விடக் கூடாதே என்பதுதான் பன்னீரின் ஒரே கவலை.
அரசியல்வாதிகள் என்றாலே அவர்கள் ஊழலின் மறுபிறவிதான் என்றாலும், பன்னீர்செல்வம் குவித்துள்ள இந்த கோடிக்கணக்கான சொத்துக்களும் உத்தமர் வேடமணிந்து அவர் நடத்தும் நாடகங்களும் வேறு வகையானவை.   ஒரு சாதாரண ரியல் எஸ்டேட் ப்ரோக்கராக இருந்தவரை, பஞ்சாயத்து தலைவராக்கி, பின்னர் அமைச்சராக்கி, இறுதியில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டபோது, நம்பிக்கையானவராக கருதி, முதலமைச்சராகவும் ஆக்கியது மன்னார்குடி மாபியாவே.
ஊழல் செய்து சொத்துக்களை குவிக்காமல் இருந்திருந்தால், பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதை ஏற்றுக் கொள்ளலாம்ஆனால், சசிகலா குடும்பம் மட்டுமே ஊழல செய்தது போலவும், இவர் உத்தமர் காந்தி போலவும், ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து தியானம் செய்ததும், அதன் பின்னர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்ததும் அயோக்கியத்தனத்தின் மொத்த வடிவம்.   உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைத்த படுபாதகர்தான் பன்னீர்செல்வம்.
மோடி இழுத்த இழுப்புக்கெல்லாம் பன்னீர் ஏன் செல்கிறார் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.   1800 அதிகாரிகளை அனுப்பி இந்தியா முழுக்க வருமான வரித் துறை சோதனைகளை நடத்த முடிந்த மத்திய அரசுக்கு, பன்னீரின் ஊழல் சாம்ராஜ்யம் தெரியாதா என்ன ?   சாதாரண பத்திரிக்கையாளர்கள் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க முடிந்த பன்னீரின் சொத்துக்களை மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் கண்டுபிடிக்க எத்தனை நாட்கள் ஆகும்ஆனால், பன்னீரை வைத்து அதிமுகவை கைப்பற்றும் எண்ணத்தின் காரணமாகஇவர்கள் ஒரு நாளும் பன்னீர்செல்வத்தின் மீது சோதனைகள் நடத்தப் போவதில்லை.   அவர் மீது ஊழல விசாரணையும் நடக்கப்போவதில்லை.
தங்குதடையில்லாமல் வசூல் நடைபெறும் வரையில், பன்னீர்செல்வமும் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்.   அவரின் இந்த வசூல் என்று பாதிக்கப்படுகிறதோ, அன்று பன்னீர் மீண்டும் உத்தமர் வேடமணிந்து, தர்மயுத்தத்தை தொடங்குவார்.
நன்றி

இந்த கட்டுரைக்கு ஆதரவும் தரவுகளும் தந்து  உதவிய, தி வீக் பத்திரிக்கை மற்றும் அதன் செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியம் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.














A3

TOP
சாதி ஆணவத்திற்கு தூக்கு
SANKAR MURDER-13/03/2017 VERDICT-12/12/2017


உடுமலைப்பேட்டையில் பட்டப் பகலில் சாதிஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கர்வழக்கில் கௌசல்யாவின் தந்தை உள்படஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. சந்தேகத்திற்கு இடமின்றி சாட்சியங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்லி கௌசல்யாவின் தாயார் உள்ளிட்ட மூன்று பேர் விடுவிக்கப்பட்டனர்.திருப்பூர் வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி அலமேலுநடராஜன் செவ்வாயன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட சங்கர், கௌசல்யா தம்பதியருக்கு எதிராக சாதிஆணவ வெறியர்கள் கொலைவெறித் தாக்குதல்நடத்தினர். இதில் சங்கர் உயிரிழந்தார்.
கௌசல்யா படுகாயம் அடைந்து உயிர் பிழைத்தார். கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய்அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை உள்ளிட் டோர் தான் இந்த கொலையை நிகழ்த்தினர் எனகௌசல்யா பகிரங்கமாக குற்றம் சுமத்தினார். இந்நிலையில் சின்னச்சாமி, அன்னலட்சுமி, பாண்டித்துரை உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை, கூட்டுச் சதி,தீண்டாமை வன்கொடுமை உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் செவ்வாயன்று நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பளித்தார். இதில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி (வயது 40) தூண்டுதலில் கொலைச்சதி திட்டமிடப்பட்டு சங்கர் கொலை செய்யப்பட்டதால் அவருக்கு மரண தண்ட விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.அத்துடன் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (31), பழனியைச் சேர்ந்த மணிகண்டன் (25), திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தசெல்வக்குமார் (25), திண்டுக்கல் புதுப்பட்டிபொன்மாந்துரையைச் சேர்ந்த கலைதமிழ் வாணன் (24), திண்டுக்கல்லைச் சேர்ந்த மதன்(எ) மைக்கேல் (வயது 25) ஆகிய 5 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.அத்துடன் திண்டுக்கல் புதுப்பட்டியைச் சேர்ந்த தன்ராஜ் (எ) ஸ்டீபன் தன்ராஜ் (23)என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. ஒவ்வொருவருக்கும் இரட்டை தண்டனைகௌசல்யா தந்தை சின்னச்சாமி உட்பட மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆறு பேர் மீதும் இந்த கொலை வழக்கில் பல்வேறு பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள் ளன.
அதன்படி ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தசிறைதண்டனைகள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்றும் அத்துடன் இரு வேறு பிரிவுகளின் கீழ் மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். அதன்படி ஆறுபேருக்கும் இரட்டை மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தன் ராஜ், வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (39) என்பவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.அத்துடன் குற்றவாளிகளுக்கு அபராதமாக ரூ.11 லட்சத்து 95 ஆயிரம் விதிக்கப்பட்டது. இந்ததொகையை வசூலித்து இரு சம பாகங்களாகப் பகிர்ந்து சங்கரின் மனைவி கௌசல்யாவுக்கும், சங்கரின் தந்தை வேலுச்சாமிக்கும் வழங்கும்படியும் நீதிபதி அலமேலு நடராஜன் உத்தரவு பிறப்பித்தார்.நீதிமன்றத்தில் நடந்தது என்ன?முன்னதாக, செவ்வாயன்று திருப்பூர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டபோது குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.12 மணியளவில் நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பளிக்கத் தொடங்கினார். அப்போது முதல்குற்றவாளியான சின்னச்சாமி மற்றும் ஏழு குற்றவாளிகள் ஆகிய எட்டு பேர் மீது குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்தார்.இதையடுத்து மேற்படி குற்றவாளிகளிடம் தண்டனை அளிப்பது குறித்து நீதிபதி, குற்றவாளிகள் தரப்பு கருத்துக்களை கேட்டார். சின்னச்சாமி தான் குற்றம் செய்யவில்லை என்று கூறியபோது, இப்போது தண்டனை அளிப்பது பற்றித்தான் கேட்கிறேன். குற்றம் செய்யவில்லை எனச் சொல்வதை ஏற்க முடியாது. இது போல் சொல்லக் கூடாது என்றார்.அப்போது குறைந்தபட்ச தண்டனை அளிக்கும்படி சின்னச்சாமி கேட்டுக் கொண்டார்.
ஏன் குறைந்தபட்ச தண்டனை அளிக்கவேண்டும், அதற்கு உங்கள் தரப்பு நியாயம் என்ன இருக்கிறது என நீதிபதி கேள்வி எழுப்பினார். மகன் இருக்கிறார், படிக்க வைக்க வேண்டும் என சின்னச்சாமி கூறினார்.இதையடுத்து குற்றவாளிகள் ஒவ்வொருவரிடமும் நீதிபதி கேள்வி எழுப்பியபோதும் அனைவரும் குறைந்தபட்ச தண்டனை அளிக்கும்படி கேட்டனர். பின்னர் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் இது பற்றி ஏதாவது கூறுகிறீர்களா என நீதிபதி கேட்டார்.அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சங்கரநாராயணன் எழுந்து, இது அரிதினும் அரிதானவழக்கு என்ற அடிப்படையில் அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரும், வழக்கறிஞர் செந்தில் குமாரும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி அதிகபட்ச தண்டனை வழங்கக் கேட்டுக் கொண்டனர்.இதையடுத்து நீதிமன்றத்தை ஒத்தி வைத்தநீதிபதி அலமேலு நடராஜன் 12.50 மணிக்கு தீர்ப்பு விபரங்களை கூறுவதாகக் கூறிவிட்டு எழுந்து சென்றார். இதன் பிறகு மதியம் 1.30மணியளவில் மீண்டும் நீதிமன்றம் கூடியது. நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பு விபரங்களைவாசித்தார்.
இதில் சின்னச்சாமி உள்ளிட்ட ஆறு பேருக்குஅவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் சட்டப் பிரிவுகள் ஒவ்வொன்றாக கூறி அவற்றுக்கான தண்டனைகளை அறிவித்தார். அதன்படி மரண தண்டனை அளிக்கப்பட்ட ஆறு குற்றவாளிகளுக்கும் இரண்டு பிரிவுகளில் இரண்டு மரண தண்டனைகள் வழங்கப்பட்டன. வெவ்வேறு பிரிவுகளில் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் பல ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மொத்தஅபராதத் தொகையில் ஒரு பகுதி அரசுக்கு வழங்கவும், மீதி தொகையை இரு பிரிவுகளாக கொலையுண்ட சங்கரின் மனைவி கௌசல்யாவிற்கும், சங்கரின் தந்தை வேலுச் சாமிக்கும் பிரித்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பளித்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை வட்டம் குமரலிங்கத்தைச் சேர்ந்தவர்சங்கர் (வயது 22). பொறியியல் பட்டதாரியானஇவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச்சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். எனினும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கௌசல்யாவின் பெற்றோர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சங்கரைதங்கள் மகள் திருமணம் செய்வதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கௌசல்யா சங்கரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சங்கர், கௌசல்யா தம்பதியர் சங்கரின் சொந்த ஊரான குமரலிங்கத்தில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில்கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதியன்று பட்டபகலில், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தின் முன்பாக தம்பதியர் இருவரையும் இருசக்கர வாகனங்களில் வந்தகும்பல் அரிவாளால் வெட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். கௌசல்யா பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.
அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. சங்கர் கொலை வழக்குதொடர்பாக தனது பெற்றோர், உறவினர்கள்மீது கௌசல்யா பகிரங்கக் குற்றம்சாட்டினார்.இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உடுமலை காவல் நிலையத்தினர் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய்அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும்எம்.மணிகண்டன், எம்.மைக்கேல் (எ) மதன்,பி.செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், கல்லூரி மாணவர் பிரசன்னா, மற்றொரு மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்புநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைநடைபெற்று வந்தது. குற்றம் சாட்டப்பட்டோர்மற்றும் அரசுத் தரப்பு வாதங்கள், விசாரணைஉள்ளிட்ட வழக்கு நடைமுறை நிறைவடைந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இந்த வழக்கில் டிசம்பர் 12-ஆம் தேதிதீர்ப்பு வழங்கப்படும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் அறிவித்து இருந்தார். அதன்படி செவ்வாயன்று மாவட்ட நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பு குறித்து கொளசல்யாவின் பார்வை
என் சங்கர் சிந்திய ரத்தத்துக்கு நீதி கிடைக்க ஒன்றே முக்கால் ஆண்டுகள் காத்திருந்தேன். அந்தவகையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்கிறேன். அதுவும், கொலை வழக்கு ஒன்றில் தீர்ப்பு வரும்வரை குற்றவாளிகளை நீதிமன்ற காவலிலேயே வைத்திருப்பது அரிதினும் அரிது. பெரும்பாலான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தூக்குத்தண்டனை குறித்த எனது கருத்து வேறாக இருந்தாலும் சாதி ஆணவக் கொலைகளுக்கு இதுவே சரியான தீர்ப்பாக இருக்கும்.இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். அவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் வரை எனது சட்டப் போராட்டம், களப் போராட்டம் ஓயாது. சங்கர் கொலைக்கு இதுமட்டுமே நீதியாகாது.
சாதி ஆணவக் கொலைகளுக்கு தனிச் சட்டம் கொண்டு வரப்படுவதே இதுபோன்ற ஆணவக் கொலைகளைத் தடுக்கும். அதுவே சங்கர் கொலைக்கு சரியான நீதியாக இருக்கும். தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்திலேயே அசாதாரண சூழல் ஏற்பட்டது. இதனால் எனக்கும் சங்கர் குடும்பத்தினரின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பது தெரியவந்துள்ளது. எங்களுக்கு உரிய பாதுகாப்பைக் காவல்துறையும் நீதித்துறையும் வழங்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி.

















A4















A5
















a6
















a7

















a8
















a9
















a
10
















a
11
















a
12
















a
13
















a14
















a
15
















a16
















a
17
















a
18
















a
19
















a
20
















a
21
















a
22
















a
23
















a
24















A25















a11















a11















a11















a11















a11















a11















a11















a11















a11















a11















a11















a11















a11















a11















a11















a11















a11















a11















a11















a11















a11















a11















a11















a11















a11















a50

No comments:

Post a Comment